×

அரசு கேபிள் டிவி நிறுவன செயல்பாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். அரசு கேபிள் டிவி நிறுவனம், இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956-ன் கீழ், குறைந்த கட்டணத்தில் சிறந்த கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டு 2007ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2011ம் ஆண்டு ‘தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனிடையே கடந்த 19.11.2022 அன்று ஒளிபரப்பு சேவையில் ஏற்பட்ட இடையூறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் ஒளிபரப்பு சேவைகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள இடர்பாடுகளை உயர் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் நிவர்த்தி செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள்  குறித்து நேற்று சென்னை தலைமை செயலகத்தில் விரிவான ஆய்வு மேற்கொண்டார். இந்நிறுவனத்தின் எதிர்கால செயல்திட்டம் குறித்து கேட்டறிந்து, வணிக திட்டங்களை விரைந்து செயல்படுத்திட அறிவுறுத்தினார். மேலும், சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவைகளை வழங்குவது குறித்தும், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களான  VOD, OTT, IPTV வழங்கக் கூடிய HD செட்டாப் பாக்ஸ்களை அடுத்த ஆறு மாத காலங்களில் வழங்குவது மற்றும் TACTV OTT APP உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், மேலும் அதிக சந்தாதாரர்களை சேர்த்து, ஒரு முன்னோடி வர்த்தக நிறுவனமாக செயல்படவும்  ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வு கூட்டத்தில், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தலைமை செயலாளர் இறையன்பு, நிதித்துறை செயலாளர் முருகானந்தம், தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் நீரஜ் மித்தல், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜான் லூயிஸ், முதன்மை தொழில்நுட்ப அலுவலர் ராபர்ட் ரவி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்….

The post அரசு கேபிள் டிவி நிறுவன செயல்பாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Govt Cable TV Company ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,Tamil Nadu Government Cable TV Company ,Government ,Government Cable TV Company ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை...